/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருப்பு பேட்ஜ் அணிந்து பணி கூட்டுறவு ஊழியர் போராட்டம்
/
கருப்பு பேட்ஜ் அணிந்து பணி கூட்டுறவு ஊழியர் போராட்டம்
கருப்பு பேட்ஜ் அணிந்து பணி கூட்டுறவு ஊழியர் போராட்டம்
கருப்பு பேட்ஜ் அணிந்து பணி கூட்டுறவு ஊழியர் போராட்டம்
ADDED : நவ 19, 2024 05:22 AM
சிவகங்கை: சிவகங்கையில் 4 கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.
கூட்டுறவில் ஆய்வாளர் பதவியில் இருந்து சார் பதிவாளர் பதவி உயர்வு வழங்குவதில் மண்டல ஒதுக்கீடு வழங்குதல், சென்னை மண்டலத்தில் ஊழியர் நலனை பாதிக்கும் விதத்தை மறுசீரமைப்பு செய்வதை கைவிட வேண்டும். கள அலுவலர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் விதமாக மாதாந்திர ஆய்வு குறியீடு வைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சிவகங்கை கூட்டுறவு இணைபதிவாளர் அலுவலக ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டுறவு வார விழா பணிகளை மேற்கொண்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். செயலாளர் கிங்ஸ்டன் டேவிட் முன்னிலை வகித்தார். பொருளாளர் பொன்னையா நன்றி கூறினார். கூட்டுறவு இணைபதிவாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு அலுவலகங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.