/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வலையனேந்தல் கண்மாய் கரை சேதம்: வேலை உறுதி திட்ட பணியாளர் மீது புகார்
/
வலையனேந்தல் கண்மாய் கரை சேதம்: வேலை உறுதி திட்ட பணியாளர் மீது புகார்
வலையனேந்தல் கண்மாய் கரை சேதம்: வேலை உறுதி திட்ட பணியாளர் மீது புகார்
வலையனேந்தல் கண்மாய் கரை சேதம்: வேலை உறுதி திட்ட பணியாளர் மீது புகார்
ADDED : ஜன 14, 2025 10:24 PM

திருப்புவனம்:
திருப்புவனம் அருகே வலையனேந்தல் கண்மாய் கரையை 100 நாள் திட்ட பணியாளர்கள் சேதப்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்புவனம் அருகே சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் வலையனேந்தல் கண்மாய் அமைந்துள்ளது. மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை கண்மாய் நடுவே செல்வதால் ஓரளவிற்கு கண்மாய் பரப்பளவு குறைந்தது.
கண்மாயில் இரண்டு மடைகள் மூலம் 200 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு, தென்னை விவசாயம் நடைபெறுகிறது.
மேலும் கண்மாயில் தண்ணீர் தேங்குவதால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதே இல்லை.
நான்கு வழிச்சாலை அருகே உள்ளதால் பலரும் கண்மாயினுள் குப்பைகள் கொட்டுவது செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டுவது என அசுத்தப்படுத்தி வந்தனர். விவசாயிகள் போராடி கண்மாயை மீட்டெடுத்தனர்.
செல்லப்பனேந்தல் ஊராட்சியில் 100 நாள் திட்டத்தின் கீழ் கண்மாயை தூர்வார முடிவு செய்து பணிகள் நடந்து வருகின்றன. பத்து நாட்களாக நடந்து வரும் பணியின் கண்மாயினுள் தூர் வாராமல் கரையை சேதப்படுத்தி வருகின்றனர்.
பத்து அடி அகலமுள்ள கரையை சேதப்படுத்தி பள்ளமாக்கி உள்ளனர். இதனால் டிராக்டர், சரக்கு வேன் எதுவுமே செல்ல முடியவில்லை. விவசாய நிலங்களுக்கு இடுபொருட்கள், விளைவித்த பொருட்கள் என எதுவுமே கொண்டு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பணிகள் நடைபெறும் போதே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கண்டுகொள்ளாமல் கரையை நீண்ட தூரத்திற்கு சேதப்படுத்தி பள்ளமாக்கி விட்டனர்.
விவசாயிகள் கூறுகையில்: கண்மாயினுள் தூர் வாராமல் கரையை வெட்டி அகலத்தை குறைத்து வருகின்றனர். கரையை வெட்டி அங்கேயே போட்டு வருகின்றனர். இதனால் மழை காலங்களில் விவசாயிகள் தடுமாறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, என்றனர்.