ADDED : செப் 20, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி,: சிங்கம்புணரி அருகே ஊராட்சி அலுவலக கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் ஒடுவன்பட்டி ஊராட்சிக்கான அலுவலக கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கட்டடம் பழுதடைந்து கூரை பெயர்ந்தும், சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏற்கனவே ஊராட்சி தலைவர் பணியாற்றியபோது கூரை பெயர்ந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்தவர்கள் தப்பினர். தற்போது கட்டடம் மழைக்கு ஒழுகுவதுடன் மேலும் பழுதடைந்து மராமத்து செய்ய முடியாத அளவில் உள்ளது. எனவே இதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்டித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.