ADDED : செப் 29, 2026 04:09 AM

அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கோட்டையிருப்பு கீழ ஊருணியில் சரிந்த தடுப்புச்சுவரை சீரமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
கோட்டையிருப்பில் காக்காளிப்பட்டி ரோடுக்கு அருகாமையில் கீழஊருணி உள்ளது. பொதுமக்கள் குளிக்க இந்த ஊருணியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊருணியைச் சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
காக்காளிப்பட்டி ரோட்டின் அருகிலுள்ள ஊருணி கரையின் ஒரு பகுதி தடுப்புச்சுவர் கட்டுமானம் சரிந்து விட்டது. இப்பகுதியில் மழை காலத்தில் மண் சரிவடையும் நிலை உள்ளது. கரையின் தடுப்புச் சுவரில் சரிந்த கற்களை சீரமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
