ADDED : டிச 17, 2024 03:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை மூங்கில் ஊருணி தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் பஜனை மடத்தில் நடந்த கூட்டு பஜனை விழாவை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, தீபாராதனை, பூஜை நடைபெற்றன.
ஐயப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஐயப்பன் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை மூங்கில் ஊருணி ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.