/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் டிச.14ல் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் தகவல்
/
சிவகங்கையில் டிச.14ல் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் தகவல்
சிவகங்கையில் டிச.14ல் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் தகவல்
சிவகங்கையில் டிச.14ல் மாரத்தான் ஓட்டம் கலெக்டர் தகவல்
ADDED : டிச 09, 2024 05:21 AM
சிவகங்கை: சிவகங்கையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் டிச.,14 அன்று நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, பள்ளி, கல்லுாரி மாணவர், பொதுமக்களிடம் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக டிச.,14 அன்று அதிகாலை 5:30 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.
இதில் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் அந்தந்த கல்வி நிறுவனம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். வயது 18 முதல் 30க்கு உட்பட்டவர்களும் பங்கேற்கலாம். மாரத்தான் ஓட்ட போட்டி இரு பாலருக்கும் தனித்தனியாக 5 கி.மீ., துாரமே நடக்க உள்ளது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் அடையாள அட்டை, கல்வி நிறுவன இ-மெயில் முகவரியை தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் சமர்பிக்க வேண்டும்.
போட்டி கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி திருப்புத்துார் ரோடு, பழைய நீதிமன்றம், தாலுகா ஆபீஸ், எல்.ஐ.சி., புதிய நீதிமன்றம், மகளிர் கல்லுாரி, திருப்புத்துார் சாலை வழியாக மின்வாரியம் அலுவலக வழியாக சுற்றி வந்து மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிக்க வேண்டும். மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடம் பிடிப்பவர்களுக்கு பதக்கம், கேடயம், சான்று வழங்கப்படும்.
முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000, ஆறுதல் பரிசு ரூ.1000 வீதம் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க டிச., 12 மாலை 5:00 மணிக்குள் ''https;//sivaganga.nic.in/'' என்ற தரவில் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். போட்டி அன்று அதிகாலை 5:00 மணிக்குள் கலெக்டர் அலுவலகம் வந்துவிட வேண்டும், என்றார்.