/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி கலெக்டர் பொற்கொடி தகவல்
/
மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி கலெக்டர் பொற்கொடி தகவல்
மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி கலெக்டர் பொற்கொடி தகவல்
மாடுகளுக்கு காணை நோய் தடுப்பூசி கலெக்டர் பொற்கொடி தகவல்
ADDED : டிச 26, 2025 05:28 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் டிச., 29 முதல் ஜன., 28 வரை மாடுகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 2.11 லட்சம் மாடுகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய் வராமல் தடுக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் டிச., 29 முதல் ஜன., 28 வரை கிராமங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் கால் மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
இதற்காக மாவட்ட அளவில் 69 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைத்து, தினமும் ஒரு குழு 150 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவார்கள். நான்கு மாத கன்று குட்டி முதல் அனைத்து வயதுள்ள மாடுகளுக்கும் தடுப்பூசிபோடப்படும். கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசியை இலவசமாக போட்டுக்கொள்ளவும் என்றார்.