/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
படமாத்துாரில் புறக்காவல் நிலையம்அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
/
படமாத்துாரில் புறக்காவல் நிலையம்அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
படமாத்துாரில் புறக்காவல் நிலையம்அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
படமாத்துாரில் புறக்காவல் நிலையம்அரசுக்கு கலெக்டர் பரிந்துரை
ADDED : ஆக 07, 2025 07:13 AM
சிவகங்கை: நாட்டாகுடி கிராமத்தில் கொலைகளை தடுக்க படமாத்துாரில் புறக்காவல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திருப்பாச்சேத்தி போலீஸ் எல்லைக்குட்பட்ட நாட்டாகுடி கிராமத்தில் சமூக விரோதிகளால் கொலைகள் நடந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தான் மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். இதற்காக படமாத்துாரில் புறக்காவல் நிலையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். கடந்த 4 ஆண்டில் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.41 கோடிக்கு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளது. நாட்டாகுடி கிராமத்தில் மட்டுமே ரூ.2.57 லட்சத்தில் 35 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ரூ.12.92 லட்சத்திற்கு நாட்டாகுடி கண்மாய் வரத்து கால்வாய் அமைத்து, அகலப்படுத்தப்பட்டன.
ரூ.6.54 லட்சத்தில் பாசன கால்வாய் அமைத்து தரப்பட்டுள்ளன. ரூ.4.38 லட்சம் செலவில் குடிநீர் குழா ய் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டாகுடியில் ரூ.31.85 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளன. நாட்டாகுடி மக்கள் அக்கிராமத்திற்கு இன்னும் தேவைப்படும் என தெரிவிக்கும் வளர்ச்சி பணிகளும் செய்து தரப்படும், என்றார்.

