/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வர்த்தக நிறுவன பெயர் பலகை தமிழில் இல்லாவிடில் அபராதம் கலெக்டர் எச்சரிக்கை

ADDED : ஏப் 14, 2025 05:23 AM

சிவகங்கை: அனைத்து வர்த்தக நிறுவன பெயர் பலகையில் கடையின் பெயர்கள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இந்த விதிகளை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.2,000, ஓட்டல்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொழிற்சாலை பெயர் பலகையில் தமிழில் இல்லாவிடில் அதிகபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவற்றை கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனம், ஓட்டல், தொழிற்சாலைகள், மோட்டார் வாகன நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.
மே 15 க்குள் தமிழில் பெயர் பலகையை மாற்றியிருக்க வேண்டும். அதற்கு பின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.