/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முறைப்படி மருத்துவ கழிவு அகற்றாத நிறுவனங்களுக்கு சீல்: கலெக்டர் எச்சரிக்கை

ADDED : டிச 31, 2024 04:36 AM
சிவகங்கை: மருத்துவ கழிவு மேலாண்மையை பின்பற்றி கழிவுகளை அகற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மருத்துவ கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரிப்பு செய்த பின்னரே அகற்ற வேண்டும். அவற்றையும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அகற்ற வேண்டும். எனவே மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஸ்கேன் சென்டர்களில் இருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகளை முறையற்ற வகையில் அப்புறப்படுத்துவதால், சுகாதார சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
மருத்துவ கழிவுகளை விஞ்ஞான ரீதியாக சுத்திகரிப்பு செய்து அப்புறப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை வெளியேற்றும் நிறுவனங்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்த பொது மருத்துவ கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாவிடில் கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அபராதமும் விதிக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனங்கள் சீல் வைக்கப்படும், என்றார்.