/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டல், உணவு விடுதிகளுக்கு விருது கலெக்டர் பொற்கொடி தகவல்
/
ஓட்டல், உணவு விடுதிகளுக்கு விருது கலெக்டர் பொற்கொடி தகவல்
ஓட்டல், உணவு விடுதிகளுக்கு விருது கலெக்டர் பொற்கொடி தகவல்
ஓட்டல், உணவு விடுதிகளுக்கு விருது கலெக்டர் பொற்கொடி தகவல்
ADDED : ஜூலை 18, 2025 11:59 PM
சிவகங்கை: அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களுக்கு மாற்றாக மக்கும் பொருட்களை பயன்படுத்தும் ஓட்டல், விடுதிகளுக்கு தமிழக அரச சார்பில் விருது, பரிசு தொகை வழங்கப்படும் என சிவகங்கை கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:அரசு தடை செய்த பாலிதீன் பொருட்களுக்கு மாற்றாக மறுசுழற்சி செய்யக் கூடிய மக்கும் பொருட்களை பயன்படுத்தும் விதமாக மஞ்சள் பை திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். மக்கும் பொருட்களை பயன்படுத்தும் ஓட்டல், உணவு விடுதிகளுக்கு விருது, பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
லைசென்ஸ் பெற்ற ஓட்டல் வணிகர்களுக்கு ரூ.1 லட்சமும், பதிவு சான்று பெற்ற உணவு விடுதி வணிகர்களுக்கு ரூ.50,000 பரிசு தொகை வழங்கப்படும்.
இதற்கென சிறப்பு குழு அமைத்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விருது, பரிசு தொகை பெற விரும்பும் வணிகர்கள் அந்தந்த நகர், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் விண்ணப்பத்தை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சிவகங்கை கலெக்டர் அலுவலக 2 ம் தளத்தில் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் ஆக., 31 க்குள் ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04575 - 243725 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். dofssasvg@gmail.com முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம், என்றார்.