/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழறிஞர்கள் விருதுக்கு விண்ணப்பம் கலெக்டர் தகவல்
/
தமிழறிஞர்கள் விருதுக்கு விண்ணப்பம் கலெக்டர் தகவல்
ADDED : அக் 13, 2025 04:01 AM
சிவகங்கை : வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, இந்த விருதுக்கு விண்ணப்பிக்க 2025 ஜன., 1 அன்று 58 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்குள் (தாசில்தாரிடம் பெற்ற சான்றுடன்) இருத்தல் வேண்டும்.
தமிழ் பணி ஆற்றியதற்கான விபரம், இரண்டு தமிழறிஞர்களிடம் நற்சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும். ஆதார், ரேஷன் கார்டு, கணவன், மனைவி இருந்தால் அவரது ஆதார் கார்டு நகல் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக 2ம் தளத்தில் உள்ள உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சித்துறையில் பெறலாம் அல்லது www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்ய வேண்டும். அதே இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் தமிழறிஞர்களுக்கு மருத்துவ படியுடன் சேர்த்து மாதம் ரூ.8,000 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நவ., 17 ம் தேதிக்குள் உதவி இயக்குனர், தமிழ்வளர்ச்சித்துறை அலுவலகம், சிவகங்கையில் ஒப்படைக்க வேண்டும் என்றார்.