ADDED : ஜூலை 24, 2025 11:57 PM
சிவகங்கை; சிவகங்கையில் கலெக்டர் அலுவலக ரோட்டில் மின்விளக்குள் இரவு முழுவதும் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
சிவகங்கை மஜித்ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு செல்லக்கூடிய ரோட்டில் உள்ள மின் விளக்குகள் எரிவதில்லை.
சிவகங்கை நகரில் இருந்து டி.புதுார், அரசு ஊழியர் குடியிருப்பு,நீதிபதிகள் குடியிருப்பு,காஞ்சிரங்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரோட்டை பயன்படுத்தி தான் மக்கள் செல்ல வேண்டும். அரசு அலுவலர்கள் குடியிருப்பில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள பெண்கள் மாணவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மாலையில் இந்த ரோடு வழியாகத்தான் நகருக்குள் செல்லவேண்டும்.
இரவு நேரத்தில் இந்த ரோட்டில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் எரியாததால் நடந்து செல்வதற்கே அச்சப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் இந்த பகுதியில் எரியாத மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.