/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி
/
மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி
ADDED : மே 16, 2025 03:14 AM
சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் மாவட்ட நிர்வாகம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் திறன் மேம்பாட்டுக்கழகம் சார்பில் 2024-25ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். இதில் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப்பாடப்பிரிவுகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உட்பிரிவுகள் பற்றியும் அவற்றிலுள்ள வேலைவாய்ப்பு குறித்தும் நீட், ஜெ.இ.,இ, கீயூட் போன்ற படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு பயிற்சி கர்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவின்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மணி கணேஷ், சுபாஷினி, மாவட்ட மேலாளர் தாட்கோ ெஷலீனா, உயர் கல்வி வழிகாட்டி கருத்தாளர்கள் கலைமணி, சிங்காரவேலு, முத்துராமலிங்கம், சதீஷ், மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மாரிமுத்து உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.