/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாடியில் இருந்து குதித்து கல்லுாரி மாணவி தற்கொலை
/
மாடியில் இருந்து குதித்து கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : ஜன 10, 2025 02:33 AM
காரைக்குடி:திருநெல்வேலி மாவட்டம் வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் மகள் பிரீத்திதேவி, 21; காரைக்குடி அருகேயுள்ள தனியார் வேளாண் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
மாணவியர் தங்கும் விடுதி மாடியில் இருந்து, 6ம் தேதி குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்லல் போலீசார் விசாரிக்கின்றனர்.
உறவினர்கள் போராட்டம்
அவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை எனவும் அவரது தந்தை செல்வகுமார் தெரிவித்துள்ளார். முறையான விசாரணை கோரி, அவரது உறவினர்கள் திருநெல்வேலி வீரமாணிக்கப்புரத்தில் அவரது வீடு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சில் ஈடுபட்டனர்.

