/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூ - வீலர் விபத்தில் கல்லுாரி மாணவர் பலி
/
டூ - வீலர் விபத்தில் கல்லுாரி மாணவர் பலி
ADDED : நவ 13, 2025 11:23 PM
சிவகங்கை: டூ - வீலரில் சென்ற கல்லுாரி மாணவர்கள் மீது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், அதப்படக்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், 18; சமயபிரபு, 18; இருவரும் நண்பர்கள். மணிகண்டன் பூவந்தி தனியார் கல்லுாரியில் மெக்கானிக்கல் முதலாம் ஆண்டு படிக்கிறார். சமயபிரபு கோவை தனியார் கல்லுாரியில் டிப்ளமா முதலாம் ஆண்டு படிக்கிறார்.
சமயபிரபு விடுமுறைக்கு சொந்த ஊர் வந்திருந்ததால், நேற்று முன்தினம் இரவு கோவை செல்வதற்காக டூ - வீலரில் சமயபிரபுவும், மணிகண்டனும் அதப்படக்கியில் இருந்து சிவகங்கை பஸ் ஸ்டாண்டிற்கு சென்றனர்.
பையூர் அருகே தொண்டி ரோடு நான்கு ரோடு சந்திப்பில் திரும்பிய போது, மதுரையில் இருந்து தொண்டி சென்ற சரக்கு வாகனம் மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் சமயபிரபு இறந்தார். சரக்கு வாகன டிரைவர் கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த நிக்சன், 46, மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

