/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏரியூர் கண்மாய்க்கு வாங்க... ஜாலியா குளிச்சிட்டு போங்க
/
ஏரியூர் கண்மாய்க்கு வாங்க... ஜாலியா குளிச்சிட்டு போங்க
ஏரியூர் கண்மாய்க்கு வாங்க... ஜாலியா குளிச்சிட்டு போங்க
ஏரியூர் கண்மாய்க்கு வாங்க... ஜாலியா குளிச்சிட்டு போங்க
ADDED : அக் 29, 2025 07:42 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கடல்போல் காட்சியளிக்கும் ஏரியூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் நிலையில் அதில் குளித்து மகிழ மக்கள் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏரியூர் கழுங்குப்பட்டி ஏரிக்கண்மாய் 227ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது 383நீர்பாசன ஆயக்கட்டுதாரர்கள் பயன்பெறும் வகையில் 3 டி.எம்.சி தண்ணீரை ஒரே நேரத்தில் தேக்கி வைக்க கூடிய அளவிற்கு மிகப்பெரிய கண்மாய் ஆகும்.
வடகிழக்கு பருவமழையின் போது மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவில், கரந்தமலை, பூதகுடி போன்ற மலைத்தொடர்களில் பெய்யும் மழைநீர் மேலுார், கீழவளவு, எருமைப்பட்டி, ஒப்பிலான்பட்டி வழியாக இக்கண்மாய்க்கு வரும். இந்தாண்டு அப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரிக்கண்மாய் தன்னுடைய முழு கொள்ளளவை எட்டி கலுங்கு வழியாக மறுகால் பாய்கிறது.
வழக்கம்போல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் குடும்பத்துடன் ஆனந்த குளியல் போட்டும், செல்பி எடுத்தும் மீன்கள் பிடித்தும் மகிழ்ந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலேயே கழுங்குப்பட்டி ஏரிக்கண்மாய் முதலில் மறுகால் பாய்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இக்கண்மாய் கரையில் சீமைக் கருவேல முட்களால் அவ்வழியே விவசாயிகள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே கரையில் உள்ள முட்செடிகளை அகற்றி கரையை பலப்படுத்தவேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

