ADDED : பிப் 08, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் இந்திய கம்யூ., மாவட்ட குழு கூட்டம் நடந்தது. கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு ராமசாமி, மாவட்ட செயலாளர் சாத்தையா, துணை செயலாளர் மருது, விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் மாரி, மாவட்ட பொருளாளர் மணவாளன், மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா, சிவகங்கை நகர் செயலாளர் சகாயம், மாவட்ட நிர்வாக குழு முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், மோகன் பங்கேற்றனர்.
சிவகங்கையில் குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவ பிரிவுகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தீர்மானித்தனர்.