/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயல் அரிசி ஆலைகளில் கமிஷனர் ஆய்வு
/
புதுவயல் அரிசி ஆலைகளில் கமிஷனர் ஆய்வு
ADDED : பிப் 01, 2025 05:06 AM
சிவகங்கை: புதுவயல் அரிசி ஆலைகளில் குழந்தை தொழிலாளர்களை கண்டறியும் ஆய்வு நடைபெற்றது.
இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளில் குழந்தை தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர்கள் இருக்கிறார்களா என சிவகங்கை மாவட்ட தொழிலாளர் நல உதவி கமிஷனர் முத்து தலைமையில் உதவி கமிஷனர் சதீஷ்குமார், தொழிலக பாதுகாப்பு துணை இயக்குனர் கிேஷார், துணை ஆய்வாளர் திவாகரன், குழந்தை ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராஜேஸ்வரி, பழனி ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர். அங்கு குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் இல்லை என்பதை உறுதி செய்தனர். மாவட்டத்தில் குழந்தை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் கண்டறியப்பட்டால், 180042 52650 அல்லது 155 214 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
நேரடியாக சிவகங்கை, காஞ்சிரங்கால், அரசனிபட்டி ரோட்டில் உள்ள தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்தனர்.