/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு கண்காணிக்க குழு
/
தடை செய்யப்பட்ட பாலிதீன் பயன்பாடு கண்காணிக்க குழு
ADDED : டிச 07, 2024 06:15 AM
சிவகங்கை: சிவகங்கையை பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் மாற்ற மாவட்ட அளவில் பணிக்குழு அமைத்து கண்காணிக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
சிவகங்கையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார்.
கலெக்டர் பேசியதாவது, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பாலிதீன் பை, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டு, டம்ளர்கள், தெர்மகோல் கப், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தும் பாலிதீன் பேப்பர், தண்ணீர் கவர், பாக்கெட், ஸ்ட்ரா, கொடிகள் தயாரிக்கவோ, விற்கவோ பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பனை ஓலை, பாக்கு மட்டை தட்டு, வாழை இலைகள், பீங்கான் தட்டு, குவளை, மண் குவளை போன்றவற்றை பயன்படுத்தவும், என்றார்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.