ADDED : டிச 02, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய குழு கூட்டம் போனியா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மானாமதுரை தல்லாகுளம் முனியாண்டி கோயில் முதல் ஆனந்தபுரம் பைபாஸ் வரை ரோட்டில் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
சாஸ்தா நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே தனியார் மதுபான கடை அமைக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட செயலாளர் சாத்தையா, துணைச் செயலாளர் மருது,பொருளாளர் மணவாளன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன்,ஒன்றிய செயலாளர் சங்கையா, நகரச் செயலாளர் நாகராஜன் கலந்து கொண்டனர்.