/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாணவர்களிடம் கல்வி சான்றுகள் பெற்று ஏமாற்றியவர் மீது புகார்
/
மாணவர்களிடம் கல்வி சான்றுகள் பெற்று ஏமாற்றியவர் மீது புகார்
மாணவர்களிடம் கல்வி சான்றுகள் பெற்று ஏமாற்றியவர் மீது புகார்
மாணவர்களிடம் கல்வி சான்றுகள் பெற்று ஏமாற்றியவர் மீது புகார்
ADDED : அக் 07, 2025 03:58 AM
சிவகங்கை: தேவகோட்டையில் தங்களை உயர்கல்வி படிக்க வைப்பதாக கூறி சான்றிதழ் வாங்கி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லுாரி மாணவர்கள் சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தேவகோட்டையை சேர்ந்த கல்லுாரி மற்றும் திருவாடானை பள்ளி மாணவர்கள் சிலரை அலெக்சாண்டர் என்பவர் நாடி, தான் ஒரு அறக் கட்டளை நடத்துவதாகவும், அதன் மூலம் விரும்பிய கல்லுாரியில் படிக்க சீட் வாங்கிதருவதாக கூறி நம்பிக்கை ஏற்படுத்தி யுள்ளார்.
இதை நம்பிய மாணவர் களிடம் அவர்களது ஒரிஜினல் கல்வி சான்று களை பெற்றுள்ளார். சான்றிதழ்களை பெற்றவர், அவர்களை கல்லுாரியில் சேர்க்கவில்லை.
இதையடுத்து தங் களிடம் இருந்து பெற்ற கல்வி சான்றினை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் மாணவர்கள் புகார் அளித்தனர்.