/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
/
தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
தேவகோட்டையில் அதிகபட்சம் 50 மி.மீ., மழை மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 07, 2025 03:58 AM
சிவகங்கை: மாவட்டத்தில் அதிக பட்சமாக தேவகோட்டையில் 50 மி.மீ., மழை பதிவானது. இங்கு ஏராளமான மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்படுத்தின.
மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மாலை அனைத்து இடங்களிலும் நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்திருந்த நிலையில், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
விவசாயிகளும் மானாவாரியாக நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்டவற்றை பயிரிட முடியா மல் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் உஷ்ணத்தை தணிக்கும் விதமாகவும், மானாவாரி விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் நேற்று முன்தினம் மாவட்ட அளவில் நல்ல மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக தேவகோட்டையில் 50 மி.மீ., மழை பதிவானது. இங்கு பெய்த மழைக்கு வாரச்சந்தை வளாகத்தில் இருந்த மரங்கள் சாய்ந்து, கடைகளை சேதப்படுத்தின.
மானாமதுரை, இளையான்குடியில் 43, திருப்புவனத்தில் 40, சிவகங்கையில் 29, காளையார்கோவிலில் 16.60, திருப்புத்துாரில் 13.60, காரைக்குடியில் 8 மி.மீ., மழை பதிவானது.
இந்த மழைக்கு நேற்று முன்தினம் மரம் விழுந்ததில் தேவகோட்டையில் மீன்வியாபாரி பெண் உயிரிழந்தார். சந்தைக்கு வந்த 5 பேர் காயமுற்றனர். வீடுகள் சேத மாகவில்லை. கால்நடைகள் இறப்பு ஏதும் இல்லை என தெரிவித்தனர்.