/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கரும்பில் செந்தாழை நோய் தாக்குதல்
/
கரும்பில் செந்தாழை நோய் தாக்குதல்
ADDED : அக் 07, 2025 03:59 AM

திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டத்தில் கரும்பில் செந்தாழை நோய் தாக்குதல் காரணமாக கரும்பின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இன்றி விவசாயிகள் தவிக்கின்றனர்.
திருப்புவனம் தாலுகாவில் கடந்தாண்டு 774 எக்டேரில் கரும்பு பயிரிடப் பட்டது. படமாத்தூர் சக்தி சர்க்கரை ஆலையில் பதிவு செய்த விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். கோயம்புத்துாரில் உள்ள கரும்பின ஆராய்ச்சி மையம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களை கண்டறிந்து வருகிறது.
இந்தாண்டு 18009 என்ற புன்னகை ரக கரும்புகளை பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரும்பில் செந்தாழை நோய் தாக்கி கரும்பின் வளர்ச்சி பாதிக்கிறது. இந்நோய் தாக்கினால் இலையின் மேற்புறம் கருப்பு நிற புள்ளிகள் நெருக்கமாக தோன்றும். அதன்பின் தோகைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி கருகி விடும். இதனால் கரும்பு வளர்ச்சியடையாது.
நடவு செய்த 10வது மாதத்தில் இருந்து 12வது மாதத்திற்குள் அறுவடை செய்ய ஆலை நிர்வாகம் அனுமதி வழங்கும் அதன்பின் வெட்டப்பட்ட கரும்புகள் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு எடைக்கு ஏற்ப பணம் வழங்கப்படும்.
இந்தாண்டு கரும்பு டன்னுக்கு ரூ.3500 விலை நிர்ணயம் செய்துள்ளனர். ஏக்கருக்கு ரூ.60,000 செலவு செய்யும் விவ சாயிக்கு 35 முதல் 40 டன் வரை கரும்பு வரத்து கிடைக்கும்.
ஒரு முறை பயிரிட்ட கரும்புகளை வைத்து 3 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம். அடுத் த டுத்த அறுவடையின் போது ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 டன் வரை விளைச்சல் குறைய தொடங்கும்.
திருப்பாச்சேத்தி விவசாயி நாகசுந்தரம் கூறியதாவது:
7 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு உள்ளேன். தற்போது செந்தாழை நோய் தாக்கியதால் விளைச்சலை பாதிக்கின்றன. இந்நோய் தாக்கத்தால் ஏக்கருக்கு ஆண்டுக்கு 20 முதல் 30 டன் வரை விளைச்சல் பாதிக்கும்.
சர்க்கரை ஆலை நிர் வாகத்தில் கூறியதாவது:
திருப்புவனம் தாலுகா வில் இருந்து 2000 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு, அரவைக்கு வருகின்றன. வெள்ளை ஈ தாக்குதலால் தான் கரும்பு பாதிக்கப்படுகிறது. தென்னை மரத்தில் பரவும் வெள்ளை ஈ அப்படியே கரும்புக்கும் பரவி விடுகிறது.
மழை பெய்தால் தோகையில் உள்ள வெள்ளை ஈ போய்விடும், மழை இல்லாததால் வேகமாக பரவி வருகிறது, வேளான் துறையினர் பரிந்துரை செய்யும் மருந்துகளையே பயன் படுத்தலாம் என்றனர்.