/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி பாதாள சாக்கடை பணிக்காக ரோடுகள் சேதம் நெடுஞ்சாலைத்துறை போலீசில் புகார்

ADDED : ஏப் 04, 2025 05:45 AM
காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் உரிய அனுமதியின்றி பாதாள சாக்கடை பணிக்காக ரோட்டை சேதப்படுத்துவதாக, நெடுஞ்சாலைத்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இங்கு, 2017 ம் ஆண்டு ரூ.112.5 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கி, கூடுதல் நிதி கோரியதின் பேரில் ரூ.140 கோடியில் சாக்கடை திட்டம் துவக்கினர். விடுபட்ட தெருக்களில் பாதாள சாக்கடை அமைக்க அம்ரூத் திட்டத்தில் தனியாக ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டது. மொத்தமாக 191.21 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாதாள சாக்கடை பணிக்காக எந்தவித முன் அனுமதியும் பெறாமல், மாநகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சேதப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து காரைக்குடி தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, நகரில் முக்கிய வீதிகளில் பாதாள சாக்கடை பணி முடிந்து ரோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் 2 பீட், ராஜீவ் சிலை உள்ளிட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி பாதாள சாக்கடை பணிக்காக ரோட்டை சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து புகார் அளித்துள்ளோம், என்றனர்.