/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததாக புகார்
/
முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததாக புகார்
முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததாக புகார்
முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததாக புகார்
ADDED : செப் 20, 2025 03:54 AM
மானாமதுரை: மானாமதுரை சூரியா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டில் திருமணம் ஆகவில்லை என்பதற்கான சான்று கேட்டு ஆன்லைனில் மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றார்.
தென்காசி மாவட்டம் ஸ்ரீரங்க ராஜபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இதற்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்துள்ளார். அதன் பின்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்ததாக மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முனப்பு புகார் வந்தது.
முதல் திருமணத்தை மறைத்து, திருமணம் ஆகாதவர் என்று மோசடியாக சான்று பெற்றதாக கூறி, அதை ரத்து செய்ய கோட்டாட்சியருக்கு தாசில்தார் பரிந்துரை செய்தார்.அந்த சான்று ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி சான்று பெற்றதாக வி.ஏ.ஓ., மானாமதுரை சிப்காட் போலீசில் மணிகண்டன் மீது புகார் கொடுத்தார்.
மேலும் மணிகண்டனை இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணும் அதிகாரிகள் பொய்யான சான்று கொடுத்ததால் தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், அதனால் சான்று கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட கலெக்டர் மற்றும் மானாமதுரை சிப்காட் போலீசில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தார்.
மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் கூறியதாவது: மணிகண்டனுக்கு முதல் திருமணம் வெளியூரில் நடந்துள்ளது. அந்த திருமணம் குறித்த தகவல் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை.
மேலும் திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றுக்கு விண்ணப்பித்ததும் மணிகண்டன் மற்றும் அவரது தந்தை, உறவினர்களிடம் வருவாய் ஆய்வாளர் விசாரித்துள்ளார்.
அப்போது அவர்கள் திருமணம் ஆகவில்லை என்றே கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்தே சான்று வழங்கப்பட்டது. முதல் திருமணம் நடந்ததாக புகார் எழுந்ததும், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றை ரத்து செய்துவிட்டோம்.மணிகண்டன் மீது 2 மாதங்களுக்கு முன்பே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் என்றார்.