ADDED : பிப் 07, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி, உதவி தலைமையாசிரியர் செல்வக்குமார், காவலர் மரியசிங்கராயர் ஓய்வு பெறுவதை தொடர்ந்து மூன்று பேருக்கும் பாராட்டு விழா பள்ளி அதிபர் பாபு வின்சென்ட் ராஜா தலைமையில் நடந்தது. தாளாளர் குழந்தைராஜ் முன்னிலை வகித்தார்.
தமிழாசிரியர் ஸ்டீபன் மிக்கேல்ராஜ் வரவேற்றார். கல்வித்துறை துணை இயக்குநர் சண்முகநாதன், ஆசிரியர்கள் தேவராசு, மைக்கேல் குரூஸ், பள்ளி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியராஜன், முன்னாள் மாணவர் மன்ற நிர்வாகி ஜேம்ஸ் டேவிட், மாணவர் மைதீன் ஆசிரியர் அன்பரசன், ஆசிரியர் சங்க செயலர் செபாஸ்டின் ராஜேந்திரன் பேசினர்.
ஆசிரியை வெண்ணிலா நன்றி கூறினார்.

