/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விளைச்சல் அதிகரித்து விலை குறைந்ததால் கவலை: மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற வழியில்லை
/
விளைச்சல் அதிகரித்து விலை குறைந்ததால் கவலை: மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற வழியில்லை
விளைச்சல் அதிகரித்து விலை குறைந்ததால் கவலை: மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற வழியில்லை
விளைச்சல் அதிகரித்து விலை குறைந்ததால் கவலை: மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற வழியில்லை
ADDED : மே 23, 2025 11:43 PM

மாவட்டத்தின் முக்கிய வேளாண் பகுதியாக விளங்கும் இவ்வொன்றியத்தில் விவசாயிகள் தோட்டப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு விளையும் காய்கறிகள் பல்வேறு வெளி மார்க்கெட்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது ஒன்றியம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் கத்தரி, மிளகாய், தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.
தோட்டப்பயிர்களுக்கு இதமான தட்பவெப்பம் நிலவியதால் அனைத்து பயிர்களும் நல்ல விளைச்சல் கண்டுள்ளது. அதே நேரம் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான காய்கறிகள் சந்தைக்கு வந்துள்ளதால், எஸ்.புதுார் காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
சராசரியாக 10 ரூபாய்க்கும் குறைவாகவே வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். எடுப்புக் கூலிக்கு கூட இந்த விலை கட்டுப்படியாகாததால், பலர் காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். முழுக்க விவசாயத்தையே நம்பியிருக்கும் இவ்வொன்றியத்தில் வேளாண், தோட்டக்கலை சார்ந்த தொழிற்சாலைகள் இல்லாததால் இது போன்ற காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பாக உள்ளது.
விலை குறையும் நேரங்களில் அறுவடை செய்யும் காய்களை மதிப்புக்கூட்டி வேறு பொருளாக மாற்றி விற்க இப்பகுதியில் வசதி இல்லை. அதற்கான தொழிற்கூடங்களை அமைக்க இதுவரை யாரும் முயற்சி செய்யவில்லை.
ஏ.வி.நாகராஜன், விவசாயி, பொன்னடப்பட்டி; காட்டுமாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் இப்பகுதி விவசாயிகள் இரவு, பகலாக பாடுபட்டு காய்கறிகளை விளைவிக்கின்றனர்.
ஆனால் அறுவடை நேரத்தில் உரிய விலை கிடைக்காததால் பலரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக விளைச்சல் அதிகரித்து விலை இல்லாத போது காய்கறிகளை செடியிலேயும், மாடுகளுக்கு இரையாகவும் விட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இப்பகுதியில் அறுவடை செய்த காய்களை பதப்படுத்தி அவற்றை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய வசதி செய்து கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். எனவே கத்தரி, தக்காளி, மிளகாய், மாங்காய் உள்ளிட்ட பயிர்களை மதிப்பு கூட்டி வேறு வடிவங்களில் அவற்றை சந்தைப்படுத்த கட்டமைப்புகளை கொண்டு வர வேண்டும்.