sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொள்ளை சம்பவங்களில் துப்பு துலங்காததால் கவலை ! பணம், நகையை இழந்த சிங்கம்புணரி மக்கள்

/

கொள்ளை சம்பவங்களில் துப்பு துலங்காததால் கவலை ! பணம், நகையை இழந்த சிங்கம்புணரி மக்கள்

கொள்ளை சம்பவங்களில் துப்பு துலங்காததால் கவலை ! பணம், நகையை இழந்த சிங்கம்புணரி மக்கள்

கொள்ளை சம்பவங்களில் துப்பு துலங்காததால் கவலை ! பணம், நகையை இழந்த சிங்கம்புணரி மக்கள்


ADDED : டிச 27, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இத்தாலுகாவில் சில ஆண்டுகளாக கொள்ளையர்கள் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈ

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கொள்ளை சம்பவங்களில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறுவதால் பணம், நகையை பறி கொடுத்தவர்கள்

கவலையில் உள்ளனர்.

டுபடுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் புகார்களை போலீசார் உடனடியாக ஏற்பதோ, ரசீது கொடுப்பதோ கிடையாது, வழக்குப் பதிந்தாலும் திருடு போன நகையை விட குறைவான எடையை பதிவு செய்கின்றனர். சிலருக்கு வழக்குப் பதியாமலேயே நகையை மீட்டுத் தருகிறோம் என சமரசம் செய்து விட்டு விடுகின்றனர்.

வழிப்பறி, டூவீலர் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களிலும் மனு ரசீது கொடுப்பதோ வழக்குப்பதிவதோ கிடையாது. குற்றங்களை குறைத்து காட்டவே இவ்வாறு செய்வதாக மக்கள் புலம்புகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்காததால், கொள்ளையர்கள் இப்பகுதியை தொடர்ந்து முற்றுகையிட்டு கொள்ளைகளை அரங்கேற்றுகின்றனர். சிங்கம்புணரி நகரில் மட்டும் குறிப்பிட்ட ஏரியாவில், குறிப்பாக போலீஸ் நிலையம் அருகேயே அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடக்கும் நிலையில் ஓரிரு சம்பவங்களில் மட்டுமே குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

2022 ஜூன் 27 ல் சுந்தரம்நகர் ஜெயபாலன் வீட்டில் 20 பவுன், வெள்ளி பொருள், லேப்டாப், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதே ஆண்டு அக். 22 ல் எம்.வி.எஸ் நகர் லதா வீட்டில் பட்டப் பகலில் 35 பவுன் நகை 75 ஆயிரம் பணம் கொள்ளை போனது.

2024 அக். 12 ல் மேலப்பட்டியில் பிரியா என்பவரின் வீட்டில் நான்கரை பவுன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இன்றுவரை புகார் மனு கொடுக்கவில்லை.

அதே ஆண்டு அக். 22ல் கம்பளிங்கம் தெரு நிர்மலாதேவியை கத்தியை காட்டி மிரட்டி ஒரு லட்சம் பறிக்கப்பட்ட சம்பவத்திலும், அக். 25 ல் வலசைபட்டி குமரேசன் என்பவர் வீட்டில் 13 பவுன் நகை, வெள்ளி, பணம் திருடு போன சம்பவத்திலும், நவ. 3ல் பாரதிநகரில் கனிமொழி, ஆதிலட்சுமணன், ஆசிரியர் சிவகாமி ஆகியோர் வீடுகளில் நடந்த கொள்ளையில் 13 பவுன் நகை, 8 கிலோ வெள்ளி, அலைபேசி உள்ளிட்டவை திருடு போயும் இன்னும் மீட்கப்படவில்லை.

கடந்த ஜூலை 5 ல் நாடார் பேட்டையில் ஆசிரியர் சரவணன் என்பவர் வீட்டில் 14 பவுன் நகை, பணம் திருடு போனது. நவ. 25ல் பள்ளங்குண்டு சிவானந்தம் என்பவரின் அலைபேசி கடையில் பட்டப்பகலில் 29 ஆயிரம் பணம் திருடு போனது.

இவற்றில் எந்த சம்பவங்களிலும் இதுவரை துப்பு துலங்கவுமில்லை, குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இதனால் நகை, பணத்தை பறி கொடுத்தவர்கள் கவலையில் உள்ளனர். இதற்கிடையில் போலீசாருக்கு சவால் விடும் விதமாக 2 நாட்களுக்கு முன்பு சிங்கம்புணரி காசியாபிள்ளைநகரில் 2 வீடுகளை உடைத்து 25 பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இப்பகுதியில் முன்னர் நடந்த சம்பவங்களில் புலனாய்வு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து துப்பு துலக்கி திருடு போன பொருட்களை மீட்டு வந்தனர். தற்போது தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனமாகவே செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நகையை பறிகொடுத்த சிலர் போலீசாரை நம்பாமல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர். எனவே கொள்ளைச் சம்பவங்களில் வரும் புகார்களுக்கு உடனடியாக மனு ரசீது வழங்கியும் வழக்குப்பதிவு செய்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதுடன் நகை பணத்தை மீட்க பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us