காரைக்குடி, : காரைக்குடியில் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கூறியும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தை தடை செய்யக் கோரியும், காரைக்குடி தேவகோட்டை வட்டார இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
காரைக்குடி ஐக்கிய முஸ்லிம் ஜமாத் கமிட்டி தலைவர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். செயலாளர் அலி மஸ்தான் வரவேற்றார். இதில் நாஞ்சில்சம்பத், மாங்குடி எம்.எல்.ஏ., திருவடிக்குடில் சுவாமி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் சரீப், தி. கா, தலைமை கழக பேச்சாளர்பெரியார் செல்வன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர் அலி, வழக்கறிஞர்சிரில், சமூக செயற்பாட்டாளர் சத்ய பிரபு செல்வராஜ், நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா, எஸ்.டி.பி.ஐ., மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் பேசினர்.

