ADDED : பிப் 17, 2025 06:54 AM
மதுரை: புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பிப். 25ல் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது தொடர்பான போராட்டக் குழு கூட்டம் நடந்தது.தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம்உள்ளிட்ட 14 சங்கங்கள் பங்கேற்றன.
அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறுகையில், ''பிப். 17ல் அரசு ஊழியர்கள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் பிரசார இயக்கம் மேற்கொள்ளப்படும். தொகுப்பூதிய, மதிப்பூதிய முறையில் பணியாற்றும் ஊழியர் சங்கங்கள் சார்பில் பிப். 25ல் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவது, தற்செயல் விடுப்பு போராட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்பானமுடிவுகள் எடுக்கப்பட்டன'' என்றனர்.