ADDED : ஏப் 27, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
காரைக்குடி ஐந்து விளக்கில், ஹிந்து முன்னணி முருக பக்தர்கள் விளக்க மாநாடு நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து காரைக்குடியில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு கூட்டம் நடந்தது. மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி பாலா தலைமையேற்றார். எஸ்.ஆர். தேவர் பேசினார்.
மாநிலச் செயலாளர் சேவுகன், வழக்கறிஞர் முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார்.
தேவகோட்டை சுரேஷ் நன்றி கூறினார்.