/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பத்தாம் வகுப்பு காலாண்டுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் குழப்பம்
/
பத்தாம் வகுப்பு காலாண்டுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் குழப்பம்
பத்தாம் வகுப்பு காலாண்டுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் குழப்பம்
பத்தாம் வகுப்பு காலாண்டுத்தேர்வு தமிழ் வினாத்தாளில் குழப்பம்
ADDED : செப் 16, 2025 04:22 AM
சிவகங்கை: 10ஆம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வில் தமிழ் வினாத்தாளில் வரிசை எண் ஒரே பத்தியாக இருந்ததால் விடையளிக்க முடியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
அரசு பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று தமிழ் தேர்வும், நாளை ஆங்கிலம், செப்.18 விருப்ப மொழி, செப்.22 கணிதம், செப்.24 அறிவியல், செப்.26 சமூக அறிவியல் தேர்வு நடக்க உள்ளது.
நேற்று நடந்த தமிழ் தேர்வில் வினாத்தாள் 3ஆம் பக்கத்தில் 36, 37 அணி அலகிடுதல் வினா எண் வரிசைப்படி கேட்காமல் 35வது எண்ணில் தொடர்ச்சியாக பத்தி வடிவில் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வினாவை புரிந்து கொள்ள சிரமப்பட்டனர்.
36,37வது கேள்வி பத்தியில் நீள வாக்கியமாக திருக்குறளை கேட்டுள்ளனர். இதனால் வினாக்களை புரிந்து கொள்ள மாணவர்கள் சிரமம் அடைந்ததாக தெரிவித்தனர்.