ADDED : அக் 15, 2025 12:48 AM
தேவகோட்டை; தேவகோட்டையில் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி நடப்பதால் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் எவ்வித வசதியும் இல்லாமல் ராம்நகர் பகுதியில் கடந்த 50 நாட்களாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பஸ்சிலும் வெவ்வேறு வித கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
காரைக்குடியிலிருந்து தேவகோட்டை ராம்நகர் செல்ல ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தான் வசூல் செய்ய வேண்டும். ஆனால் தேவகோட்டைக்கான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அங்கிருந்துபழைய பஸ் ஸ்டாண்டிற்கு தனியாக ரூ.10 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
சில தனியார் பஸ்களில் பழைய பஸ் ஸ்டாண்டில் ஏறி காரைக்குடிக்கு சென்றால் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு பஸ்சில் ரூ.17ம், ஒரு பஸ்சில் ரூ. 20 வாங்குவது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.