/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தண்ணீர் சூழ்ந்த மாணவர் விடுதி; சீரமைப்பு பணி தொடக்கம்
/
தண்ணீர் சூழ்ந்த மாணவர் விடுதி; சீரமைப்பு பணி தொடக்கம்
தண்ணீர் சூழ்ந்த மாணவர் விடுதி; சீரமைப்பு பணி தொடக்கம்
தண்ணீர் சூழ்ந்த மாணவர் விடுதி; சீரமைப்பு பணி தொடக்கம்
ADDED : அக் 15, 2025 12:47 AM

காரைக்குடி; காரைக்குடி பருப்பூரணி அரசு மாணவர் விடுதி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்த நிலையில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
இங்கு சீர் மரபினர் கல்லூரி மாணவர் விடுதி ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கிச்சன், டைனிங் ஹால், உடற்பயிற்சி கூடம், செம்மொழி நூலக அறை, கம்ப்யூட்டர் அறை, உள் விளையாட்டு அரங்கம் உட்பட பல்வேறு வசதிகளுடன் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. சோலார் இணைப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் ஒரு அறைக்கு 4 பேர் என 36 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
விடுதியைச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் உள்ளது. ஆனால் மழை பெய்தால் தண்ணீர் வெளியே செல்ல வழியின்றி வளாகத்திற்குள் தேங்கி கிடந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தண்ணீர் தேங்குவதை தடுக்க சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.