/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடிக்கு இன்று கவர்னர் வருகை
/
காரைக்குடிக்கு இன்று கவர்னர் வருகை
ADDED : அக் 15, 2025 12:47 AM
காரைக்குடி; காரைக்குடி அழகப்பா பல்கலையில் இன்று நடைபெறும் தேசிய கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என். ரவி பங்கேற்கிறார்.
அழகப்பா பல்கலையில் பண்டிட் தீனதயாள் உபத்யாய் இருக்கை சார்பில், தேசிய அளவிலான, கருத்தரங்கம் 2 நாட்கள் கருத்தரங்கம் நடக்கிறது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047, ஒருங்கிணைத்த மனித நேயம் வழியாக சிறந்த நிர்வாகத்தை வழங்குவது எப்படி என்பது குறித்த கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகிறார்.
துணை வேந்தர் ரவி வரவேற்கிறார்.தேசிய பண்பாட்டு மைய அகில இந்திய தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே, திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிறுவன துணைவேந்தர் பஞ்சநாதம் பேசுகின்றனர். பதிவாளர் செந்தில் ராஜன், பேராசிரியர் தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.