/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காங்., நிர்வாகி கார் சாவி பறிப்பு
/
காங்., நிர்வாகி கார் சாவி பறிப்பு
ADDED : மார் 12, 2024 06:07 AM
கீழச்சிவல்பட்டி : சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே காங்., நிர்வாகி சென்ற கார் சாவியை காங்., எம்.பி., கார்த்தி ஆதரவாளர்கள் பறித்து சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராஜிவ் பஞ்சாயத்துராஜ் தேசிய ஒருங்கிணைப்பாளர் இனமுன் அஷன். மார்ச் 10ல் சிவகங்கை நகரம்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் முடித்து விட்டு பொன்னமராவதிக்கு சென்றார். கீழச்சிவல்பட்டி செண்பகம் பேட்டை டோல்கேட் அருகே பின்புறமாக வந்த கார், இனமுன் அஷன் சென்ற காரை மறித்து நின்றது. காரில் வந்தவர்கள் இனமுன் அஷன் கார் சாவியை எடுத்து சென்றனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார்.
புகாரில் மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, மானாமதுரை நகராட்சி கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட 3 பேர் வந்ததாக தெரிவித்துள்ளார். போலீசார் தெரிவிக்கையில் 'கார் சாவியை மீட்டு புகார்தாரரிடம் கொடுத்து விட்டோம்,என்றனர்.
சிவகங்கை காங்., மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி கூறியதாவது: ராஜிவ் பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பில் சிவகங்கைக்குள் தேசிய பொறுப்பாளர் இனமுன்அஷன் கூட்டம் நடத்தினார். என் அனுமதியுடன் தான் நடத்த வேண்டும் என கேட்டேன். இதற்காக அவரது கார் சாவியை பறித்ததாக போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளார். அவரே காரையும், சாவியையும் திருப்புத்துாரில் என்னிடம் கொடுத்து விட்டு தான் சென்றார். போலீசில் என் மீது வழக்கு பதிவு செய்தால், நானும் அவருக்கு எதிராக பொய் புகார் என போலீசில் வழக்கு தொடர்வேன்.

