
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ஸ்டேட் வங்கி தலைமை அலுவலகம் முன்பாக மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.பி., கார்த்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சஞ்சய்காந்தி, காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் விஜயகுமார், வட்டாரதலைவர்கள் மதியழகன், சிதம்பரம், வெள்ளைச்சாமி, மாவட்ட துணை தலைவர் உடையார், மோகன்ராஜ், மாநில மகளிர் துணை தலைவி ஸ்ரீ வித்யாகணபதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹீம், கவுன்சிலர் மகேஷ்குமார், ரெட்ரோஸ் பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் பத்திர திட்ட விவகாரத்தில் பா.ஜ.,விற்கு சாதகமாக செயல்படும் ஸ்டேட் வங்கியின் முறைகேடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

