/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்த காங்.,: கார்த்தி எம்.பி.,
/
தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்த காங்.,: கார்த்தி எம்.பி.,
தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்த காங்.,: கார்த்தி எம்.பி.,
தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்த காங்.,: கார்த்தி எம்.பி.,
ADDED : அக் 10, 2024 05:41 AM
திருப்புத்துார்: தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்தது காங்கிரஸ் என காங். சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்புத்துாரில் நடந்த தேசிய விழிப்புணர்வு பாதயாத்திரை நிறைவில் கார்த்தி எம்.பி., தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியதாவது: காங்கிரசை பற்றி நம்முடன் இருக்கும் கட்சியும், இல்லாத கட்சிகளும் தவறான விமர்சனத்தை வைக்கிறார்கள். 'காங். எங்கே இருக்கிறது' என்பார்கள். இப்போது தொகுதி வாரியாக நடத்தப்படும் பாதயாத்திரையில் வருபவர்களைப் பார்த்தால் அதற்கு பதில் கிடைக்கும். தேர்தல் நேரத்தில் மட்டும் கூடி கலையும் கட்சியல்ல. மக்களோடு மக்களாக எல்லா நேரத்திலும் இருக்கும் கட்சி தான் காங். தேர்தல் நேரத்தில் மட்டும் நாம் சுறுசுறுப்பாக இருந்தால் போதாது. மக்களை அடிக்கடி சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி நம் குரல் ஒலிக்க வேண்டும்.காங். இல்லாமல் இந்திய தேசியம் இல்லை.
சுதந்திரப் போராட்டத்திற்கு மட்டும் நாம் பாடுபடவில்லை. பின்னர் நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கவும் காங். பாடுபட்டது. தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் கலக்க வைத்த இயக்கம் காங். என்றும் அரசியலிலும், மக்கள் மனதிலும் காங்.க்கு இடம் உண்டு. இவ்வாறு பேசினார்.
எம்.எல்.ஏ., மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ.,அருணகிரி, மாவட்ட துணைத்தலைவர் கணேசன் மாவட்டப் பொருளாளர் ஜெயராம், மாநில இலக்கிய அணி சபாபதி, ஜெயச்சந்திரன், வட்டார தலைவர்கள் பன்னீர் செல்வம், பிரசாந்த் வீரமணி,நகர் தலைவர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

