/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரூ.36.75 கோடியில் 700 கண்மாய் மடைகள் கட்டும் பணி; நிதி வராமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு
/
ரூ.36.75 கோடியில் 700 கண்மாய் மடைகள் கட்டும் பணி; நிதி வராமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு
ரூ.36.75 கோடியில் 700 கண்மாய் மடைகள் கட்டும் பணி; நிதி வராமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு
ரூ.36.75 கோடியில் 700 கண்மாய் மடைகள் கட்டும் பணி; நிதி வராமல் கான்ட்ராக்டர்கள் தவிப்பு
ADDED : நவ 13, 2024 09:27 PM

சிவகங்கை ; வேலை உறுதி திட்டத்தில் ரூ.36.75 கோடியில் 700 கண்மாய்களில் மடைகள் கட்டியும், அதற்கான நிதியை வழங்காமல், மாவட்ட நிர்வாகம் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இம்மாவட்டத்தில் வேலை உறுதி திட்டத்தில், கண்மாய்களில் மழைநீர் சேகரித்து, விவசாய பயன்பாட்டிற்கு முறைப்படி திறந்துவிட ஏதுவாக சேதமான கண்மாய்களில் உள்ள மடைகளை புனரமைக்க முடிவு செய்தனர். 2023--2024 ம் ஆண்டில் மாவட்ட அளவில் 700 கண்மாய்களில் மடை கட்ட வேண்டும் என முடிவு செய்து, ஒரு மடைக்கு ரூ.5.25 லட்சம் வீதம் ரூ.36.75கோடி தேசிய வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.
பருவ மழை காலங்களில் கண்மாய்களில் சேகரமாகும் மழை நீர், மடையின்றி வீணாகிவிடாமல் தடுக்கும் நோக்கில் கண்மாய்களில் மடைகள் புதிதாக கட்டும் பணி செய்துள்ளனர்.
பெரும்பாலான கண்மாய்களில் மடைகள் கட்டப்படாமல் உள்ளது. இதற்காக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீதத்தை மண் தோண்டுதல், கட்டுமான பணிகளுக்கு சம்பளமாக வழங்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அரசு, மடைகள் கட்டுவதற்கான முழு தொகையையும் வழங்கும். அந்த நிபந்தனையின் பேரிலேயே ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், அந்தந்த ஊராட்சிகளின் செயலர்களுக்கு பணி செய்வதற்கான உத்தரவை வழங்கினர்.
இதன் பேரில், ஊராட்சி செயலர்கள், அந்தந்த ஊராட்சி தலைவர்களின் பரிந்துரையின் பேரில், மடை கட்டுவதற்கான பணிகளை ஒப்பந்ததார்களிடம் வழங்கினர். இந்த பணியை முடித்து 7 மாதங்களுக்கும் மேலான நிலையில், மடைகள் கட்டியதற்கான நிதியை வழங்க, ஊரக வளர்ச்சி முகமை மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இயக்குனரகத்திற்கு கலெக்டர் கடிதம்
ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது: மாவட்ட அளவில் 700 மடைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டதில், 60 சதவீத பணிகள் தான் முடிந்துள்ளன.
இன்னும் சில மடைகள் கட்டும் பணி துவங்காமல் உள்ளது. வேலை உறுதி திட்ட விதிப்படி, மடைகள் கட்டும் பணியில் வேலை உறுதி திட்ட ஊழியர்களை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான மடைகள் கட்டியவர்கள் அவர்களை பயன்படுத்தாமல், இயந்திரங்கள் மூலம் பணிகளை செய்து விட்டனர்.
இதனால், அதுபோன்ற மடைகள் கட்டிய அனுமதி கடிதத்தை அரசே ரத்து செய்து விட்டது. மீண்டும் அந்த பணிக்கு அனுமதி கடிதம் கோரி கலெக்டர் ஆஷா அஜித், ஊரக வளர்ச்சி முகமை இயக்குனர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதற்கான அனுமதி வந்ததும், நிதி வழங்கப்படும், என்றனர்.