sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 பயனாளிக்கு இழப்பீடு வழங்க  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

/

 பயனாளிக்கு இழப்பீடு வழங்க  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

 பயனாளிக்கு இழப்பீடு வழங்க  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

 பயனாளிக்கு இழப்பீடு வழங்க  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு


ADDED : நவ 23, 2025 04:22 AM

Google News

ADDED : நவ 23, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் தனியார் நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டு இழந்த பணத்தையும் அதற்குரிய இழப்பீட்டு தொகை ரூ.10 ஆயிரத்தையும் பயனாளிக்கு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிவகங்கை சிபி காலனி சக்தி நகரைச் சேர்ந்தவர் சமயமுத்து. டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவர் 2021ல் சிவகங்கையில் உள்ள தனியார் சிட்பண்ட் மற்றும் பைனான்ஸ் கம்பெனியில் ரூ.25 லட்சம் சீட்டில் சேர்ந்தார்.

இதற்கு மாதம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வீதம் 20 மாதம் கட்ட வேண்டும். இந்த சீட்டில் 2021 மார்ச் முதல் தவணை ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரம் அந்த சிட்பண்ட் வங்கி கணக்கில் செலுத்தினார்.

அதன் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதால் அடுத்த தவணை தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் தான் கட்டிய முதல் தவணை தொகை திருப்பி தரும்படி சிட்பண்டிடம் சமயமுத்து கேட்டார்.

அதற்கு சிட்பண்ட் நிறுவனத்தினர் 5 சதவீதம் செலவுத் தொகையை எடுத்துக்கொண்டு மீதி தொகையை ஒரு மாதத்திற்குள் கொடுத்து விடுவோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்கவில்லை.

இதை தொடர்ந்து சமயமுத்து தான் கட்டிய தொகையில் 5 சதவீத கழிவு போக தனக்கு வரவேண்டிய ரூ.ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 750 மற்றும் இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று சிவகங்கை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி பாலசுப்பிரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமோன் ராஜ் விசாரித்தனர். சமயமுத்துவிற்கு சிட்பண்ட் நிறுவனத்தினர் செலுத்திய தொகையில் நிர்வாகச் செலவிற்கு 5 சதவீதம் பிடித்தது போக ரூ.ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 750 திருப்பி கொடுக்க வேண்டும்.

சமயமுத்துவிற்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு தொகைக்கு ரூ.10 ஆயிரம் சேர்த்து ஒரு மாதத்திற்குள் வழங்க உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us