/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளத்தில் கலங்கல் நீர் சப்ளை
/
கட்டிக்குளத்தில் கலங்கல் நீர் சப்ளை
ADDED : நவ 02, 2025 04:29 AM

மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கிராமத்தில் வரும் குடிநீர் கலங்கலாக வருவதால் கிராம மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.
கட்டிக்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமி கோயில் எதிரேயுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நீண்ட வருடங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அத்தொட்டி மிகவும் சேதமடைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டு அதற்கு பதிலாக அருகிலேயே புதிதாக புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டு தற்போது அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கட்டிக்குளத்தில் உள்ள சில பகுதிகளில் வீடுகளுக்கு வரும் குடிநீர் மிகவும் கலங்கலாகவும், துாசியோடும் வருவதால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

