/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து ஏற்படும் உயிர்பலி
/
மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து ஏற்படும் உயிர்பலி
மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து ஏற்படும் உயிர்பலி
மானாமதுரை நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து ஏற்படும் உயிர்பலி
ADDED : அக் 22, 2025 12:48 AM

மானாமதுரை: மானாமதுரை நகர்ப் பகுதியை கடந்து செல்லும் நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் உயிர் பலி அதிகரித்து வருகிற நிலையில் ரவுண்டானா அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாக கடந்த 7 வருடங்களுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
மானாமதுரையில் புது பஸ் ஸ்டாண்டை ஒட்டி செல்லும் நான்கு வழிச்சாலையில் பைபாஸ் ரயில்வே கேட் இருந்ததை தொடர்ந்து தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே இருந்து மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் முன்பு வரை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வரும் போது புது பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்காக வரும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படுவதாலும் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்பவர்களும் அடிக்கடி விபத்தில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர்.
வாகனங்களில் வேகத்தை குறைப்பதற்காக வைக்கப்பட்ட தடுப்புகளாலும் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே புது பஸ் ஸ்டாண்டிலிருந்தும், அண்ணாதுரை சிலை மற்றும் சிவகங்கை மேம்பாலம் வழியாக சர்வீஸ் ரோடு வழியாக வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையை கடந்து சிவகங்கை செல்லும் ரோட்டிற்கு திரும்பும் போதும் அப்பகுதியில் வாகனங்களை வளைக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிற நிலையில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு பைபாஸ் ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் மூடிய போது மானாமதுரை நகர்ப் பகுதியில் இருந்து செல்லும் வாகனங்கள் முழுமையாக இந்த மேம்பாலத்தின் வழியாக செல்வதற்காக வரும்போது திருப்ப முடியாமல் நான்கு வழிச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.
ஆகவே நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் மானாமதுரையில் தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே சர்வீஸ் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் திரும்பும் வகையிலும் தஞ்சாவூரிலிருந்து மானாமதுரை வரை வருகின்ற தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையிலும் ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு முன்பாக நிறைவு பெற்ற மேம்பாலத்தை மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் விரைவில் அமைய உள்ள மேற்கு புற வாயிலை தாண்டி முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.