/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசாரின் கடும் நடவடிக்கை தேவை
/
தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசாரின் கடும் நடவடிக்கை தேவை
தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசாரின் கடும் நடவடிக்கை தேவை
தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசாரின் கடும் நடவடிக்கை தேவை
ADDED : நவ 25, 2025 04:38 AM
திருப்புவனம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் அலட்சியமாக இல்லாமல் கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புவனம் அருகே கே.பெத்தானேந்தலில் நவ.13ம் தேதி வீராயி என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் நந்த குமார், பாலகிருஷ்ணன், செண்பகமூர்த்தி உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப் பட்டனர்.
பதிலுக்கு மதுரை கல்மேடு கிராமத்தில் உள்ள நந்தகுமார் வீட்டில் பத்து பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதுடன் ஆட்டோ, டூவீலர் உள்ளிட்டவற்றை நொறுக்கிவிட்டு தப்பியது.
இதில் பிரகாஷ், ராஜபாண்டி, முகேஷ் கண்ணன், வெங்கட்டி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்புடையவர்களை தேடி வரு கின்றனர்.
இதே போல பல்வேறு சம்பவங்களிலும் எதிரிகளை மிரட்ட பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
பெட்ரோல் விற்பனை மையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என கட்டுப்பாடு உண்டு. ஆனால் அதனையும் மீறி சில பெட்ரோல் விற்பனை மையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விற்பனை மையங்களில் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மானாமதுரையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கலைக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகி யும் இன்றுவரை குற்றப்பிரிவு போலீசார் நிய மிக்கப்படவில்லை.
இதனால் ரவுடிகளை பின் தொடர்வது, அவர்களின் அலைபேசிகளை கண்காணிப்பது இல்லை. இதனால் மானாமதுரை சப் டிவிஷனில் குற்ற வாளிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர்.
எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

