ADDED : ஆக 05, 2025 05:13 AM
காரைக்குடி: காரைக்குடியில் முன்னறிவிப்பின்றி தொடர் மின் வெட்டு செய்வதால், பொதுமக்கள், வர்த்தகர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.
காரைக்குடி மின் வாரிய அலுவலகத்தின் கீழ் காரைக்குடி வடக்கு, தெற்கு, கிராமப்புபுறம் கானாடுகாத்தான், புது வயல், கல்லல் கண்டர மாணிக்கம், தேவகோட்டை நகர், தேவகோட்டை கிராமப்புறம் உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
காரைக்குடி பகுதி யில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடை களுக்கு மின்விநியோகம் வழங்கப்படுகிறது.
காரைக்குடி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக முன்னறிவிப்பு இல்லாத தொடர் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. பல மணி நேரம் தொடரும் இந்த திடீர் மின்வெட்டால் பொதுமக்களும் வியாபாரிகளும் அவதி யடைந்து வருகின்றனர்.
மின்வெட்டு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தனர்.

