ADDED : டிச 13, 2024 04:16 AM
தேவகோட்டை: தேவகோட்டையிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. காலை 10:00 மணி வரை இதே நிலை இருந்தது. 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் மழை பெய்து கொண்டே இருந்த சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறை விடப்படும் என மாணவர்கள், பெற்றோர்கள் காலை 7:30 மணிவரை எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விடுமுறை விடாததால் மாணவ மாணவியர் பள்ளிக்கு மழையில் நனைந்தபடியே சென்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று காலை 6:00 மணி வரை அரசின் அறிவிப்பின் படி அதிகமாக 31.மி.மீ. மழை தேவகோட்டையிலும், அடுத்த நிலையில் 21 மி.மீ. காரைக்குடியிலும் பெய்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்த நிலையில் விடுமுறை விடாத நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்த பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகம் மீது தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

