/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தொடர் மழை விளக்கு தயாரிக்கும் பணி பாதிப்பு
/
மானாமதுரையில் தொடர் மழை விளக்கு தயாரிக்கும் பணி பாதிப்பு
மானாமதுரையில் தொடர் மழை விளக்கு தயாரிக்கும் பணி பாதிப்பு
மானாமதுரையில் தொடர் மழை விளக்கு தயாரிக்கும் பணி பாதிப்பு
ADDED : நவ 28, 2024 05:22 AM
மானாமதுரை: மானாமதுரையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்பாண்ட தொழிலாளர்கள் விளக்குகள் தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மானாமதுரையில் 300க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வருடம் தோறும் சீசனுக்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.வரும் டிச. 13ம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை விழாவை முன்னிட்டு மானாமதுரையில் அகல் விளக்குகள், சரல் விளக்குகள்,தேங்காய் முக விளக்குகள், சாமி விளக்குகள் என பல்வேறு வகையான விளக்குகளை ரூ.5 முதல் ரூ.500 வரை தயார் செய்து விற்று வருகின்றனர்.
கடந்த 3 நாட்களாக மானாமதுரையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விளக்குகளை தயாரிக்க பயன்படும் மண் மிகவும் ஈரமாக இருப்பதாலும்,தயார் செய்யப்பட்ட விளக்குகளை உலர வைக்க முடியாமலும் விளக்கு தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: மானாமதுரை மண்பாண்ட தொழில் கூடங்களுக்கு முன்பாக மழை நீர் தேங்கி நிற்பதால் விளக்குகள் தயாரிக்க பயன்படும் மண் மிகவும் ஈரமாக உள்ளது.மேலும் மழை நேரத்தில் விளக்குகள் செய்தாலும்,வெயில் அடிக்காத நிலையில் அதனை உலர வைக்கவோ,சூளையில் வைக்கவோ முடியவில்லை. தொழிலாளர்களும் மழையில் நனைந்து கொண்டு வேலை பார்க்க முடியாததால் விளக்குகள் தயாரிக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.