/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் தொடர் மழை நெல் அறுவடை பணி தாமதம்
/
சாக்கோட்டையில் தொடர் மழை நெல் அறுவடை பணி தாமதம்
ADDED : ஆக 12, 2025 11:32 PM

காரைக்குடி: சாக்கோட்டை பகுதியில், நெற்பயிர் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தொடர் மழையால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4,500 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மானாவாரி மூலமே விவசாயமே இப்பகுதியில் நடைபெறுகிறது. சில பகுதிகளில் மட்டுமே போர்வெல் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.
இந்நிலையில் பெத்தாச்சி குடியிருப்பு பகுதிகளில் விவசாயிகள் கடந்த பங்குனி மாதம் நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.
உழவு, உரம், விதை நெல் என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்தனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், தற்போது தொடர் மழை பெய்ததால் அறுவடைப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில்: கடந்த பங்குனியில் நெல் விதைப்பில் ஈடுபட்டோம். அவ்வப்போது மழை பெய்தாலும் போர்வெல் மூலமே விவசாயம் நடந்தது.
தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. தொடர் மழையால் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருசில நாட்களில் அறுவடை பணி நடைபெறும்.