/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணிமுத்தாறில் தொடர் நீர்வரத்து 50 கண்மாய்கள் பெருகின
/
மணிமுத்தாறில் தொடர் நீர்வரத்து 50 கண்மாய்கள் பெருகின
மணிமுத்தாறில் தொடர் நீர்வரத்து 50 கண்மாய்கள் பெருகின
மணிமுத்தாறில் தொடர் நீர்வரத்து 50 கண்மாய்கள் பெருகின
ADDED : அக் 27, 2024 04:55 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதி மணிமுத்தாறில் தொடர் நீர் வரத்தால் 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
மதுரை மாவட்டத்தில்இருந்து வரும் உப்பாறு, டி.மாம்பட்டியிலிருந்து மணிமுத்தாறாக ஏரியூர், திருப்புத்துார் பகுதியில் செல்கிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து ஆற்றில் நீர் வரத்து உள்ளதால், இப்பகுதி கண்மாய்கள் பெருகியுள்ளன. ஏரியூர் பகுதியில் 26 கண்மாய்கள், வடமாவளி அணைக்கட்டில் 26, ஐந்துகால் அணைக்கட்டில் 5 கண்மாய்கள், மேலும் பல ஏந்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பெருகி வடமாவளி அணைக்கட்டிலிருந்து நீர் வெளியேறி செல்கிறது.
பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'மணி முத்தாறில் தொடர்ந்து நீர் வரத்தால் அப்பகுதி கண்மாய்கள் பெருகி விட்டன. ஆனால் விருசுழியாற்றில் தொடர் நீர் வரத்தில்லை. பாலாற்றில் மீண்டும் நீர்வரத்து துவங்கி கோட்டையிருப்பு அணைக்கட்டை எட்டியுள்ளது. மேலும் சில நாட்கள் தொடர்ந்தால் திருப்புத்துார் பெரியகண்மாய்க்கு நீர் வரத்து ஏற்படும்' என்றனர்.