/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்குறிச்சி அரசு பள்ளியில் பாலியல் புகாரால் சர்ச்சை: அதிகாரிகள் ஆய்வு
/
கல்குறிச்சி அரசு பள்ளியில் பாலியல் புகாரால் சர்ச்சை: அதிகாரிகள் ஆய்வு
கல்குறிச்சி அரசு பள்ளியில் பாலியல் புகாரால் சர்ச்சை: அதிகாரிகள் ஆய்வு
கல்குறிச்சி அரசு பள்ளியில் பாலியல் புகாரால் சர்ச்சை: அதிகாரிகள் ஆய்வு
ADDED : பிப் 19, 2025 01:49 AM
மானாமதுரை:மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் மீது பாலியல் புகார் எழுந்ததால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்கள் ஈகோ மற்றும் ஜாதி பிரச்னையில் குழுக்களாக பிரிந்து செயல்படுவதால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
சில நாட்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிலர் தவறு செய்ததை தொடர்ந்து அவர்களை முட்டி போட செய்ததை ஆசிரியர்கள் சிலர் வீடியோ எடுத்து பரப்பியதால் சர்ச்சை ஏற்பட்டது. நேற்று பள்ளியில் ஒரு மாணவி கழிப்பறைக்கு சென்று விட்டு உடையை சரி செய்யாமல் வந்துள்ளார். அதை பார்த்த ஆசிரியர் ஒருவர் கண்டித்துள்ளார்.
எதிர் தரப்பு ஆசிரியர்கள் சிலர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் அந்த ஆசிரியர் ஈடுபட்டதாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் தெரிவித்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவியின் தாய் ஆசிரியர்களுடன் தகராறில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மாரிமுத்து, தாசில்தார் கிருஷ்ணகுமார், குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
மாவட்ட கல்வி அதிகாரி கூறியதாவது:
பள்ளியில் ஏற்படும் பிரச்னை குறித்து ஒவ்வொரு ஆசிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக குழந்தைகள் நல குழுவினர் விசாரிக்கின்றனர். அறிக்கையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெற்றோர்கள் கூறும்போது, ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்தால் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், என்றனர்.